திருப்புவனம்: சிவகங்கை, திருப்புவனத்தில் நடந்த தி.மு.க., கூட்டத்தில், முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக, மாணவரணி செயலாளர் பாரி, மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட் அரசு வக்கீல் மகேஷ்ராஜா, திருப்புவனம் போலீசில் கொடுத்துள்ள புகார்: திருப்புவனத்தில், ஜன., 25 ல், தி.மு.க., மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம், முன்னாள் துணை செயலாளர் இலக்கியதாசன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பேசிய, ஒன்றிய மாணவரணி செயலாளர் கே.எம்.பாரி, தமிழக முதல்வரை தரக்குறைவாக, அவதூறாக, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து பேசினார், என, தெரிவிக்கப்பட்டது. இதன்படி, பாரி, சேங்கைமாறன் மீது இழிவாக பேசுதல், அவதூறு, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரிக்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.