அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் மாற்றத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, அகில இந்திய பொதுச் செயலர், செயலர், காரிய கமிட்டி உறுப்பினர் போன்ற பதவிகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்திற்கு பதிலாக, முன்னாள் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி அல்லது பொதுச் செயலர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களின் மாநாடு, ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்தது. அதில் துணைத் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொதுச் செயலர் பதவி, தற்போது காலியாகவுள்ளது.
அந்த பதவி, தமிழகத்தைச் சேர்ந்தவரும், ம.பி.,யிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மீனாட்சி நடராஜனுக்கு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ராகுலிடம் தற்போது உள்ள இளைஞர், மகளிர், மாணவர் காங்கிரஸ் பிரிவின் பொறுப்பாளர் பதவி, மீனாட்சி நடராஜனுக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பொருளாளர் பதவியிலிருந்து மோதிலால் வோரா விடுவிக்கப்பட்டு, அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்படும் என்றும், பொருளாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா பெயர் அடிபடுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மட்டுமே தற்போது காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். அவருக்கு மீண்டும் காரியக் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, எம்.பி.,க்கள் அழகிரி, மாணிக் தாகூர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காயத்ரிதேவி, வசந்தகுமார், செல்வராஜ் ஆகியோருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி கிடைக்குமா என, அவர்களது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உறுதியாக உள்ளார். ஆனால், அவருக்கு ஒத்துழைப்பு தராமல், கோஷ்டித் தலைவர்கள் சிலர் முட்டுக்கட்டையாக உள்ளனர். விரைவில், அவர் சோனியா, ராகுலை நேரில் சந்தித்து, நிர்வாகிகள் நியமனம் குறித்து, முறையிடவும் திட்டமிட்டுள்ளார் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.