திருவனந்தபுரம்:"கேரள மாநில, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர், பினராயி விஜயன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள், பொய்யானது அல்ல' என, முன்னாள் முதல்வர், அச்சுதானந்தன் கூறியுள்ளதை அடுத்து, இருவருக்கும் இடையே, மோதல் அதிகரித்துள்ளது.கேரளாவில், 1996-98 ஆண்டில், மாநில மின்துறை அமைச்சராக இருந்த, பினராயி விஜயன், கனடா நாட்டை சேர்ந்த, எஸ்.என்.சி.லாவ்லின் என்ற நிறுவனத்திற்கு, கான்ட்ராக்ட் வழங்கினார். அதில், 375 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக, பினராயி மீது, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்தது.
மாநில செயலராக இருக்கும், பினராயி விஜயனுக்கும், அதே கட்சியை சேர்ந்த, முன்னாள் முதல்வர், அச்சுதானந்தனுக்கும், எப்போதும் ஆகாது.இதற்கிடையே, சில நாட்களுக்கு முன், அச்சுதானந்தன் ஆதரவாளர்கள், மூன்று பேர் மீது மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முயன்றது. இதை, கட்சியின் தேசிய பொலிட்பீரோ தடுத்து நிறுத்தியது.திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் அச்சுதானந்தன் கூறியதாவது:பினராயி விஜயன் மீது தொடரப்பட்டுள்ள, லாவ்லின் முறைகேடு வழக்கு பொய் வழக்கல்ல. இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. பினராயி விஜயன் குற்றம் செய்யவில்லை என்றால், அவரை ஏன் குற்றவாளியாக சி.பி.ஐ.,சேர்த்துள்ளது? அவர் மேற்கொண்ட முறைகேட்டில், மாநில அரசுக்கு, 375 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக, கணக்கு தணிக்கை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது.இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, புகைந்து கொண்டிருக்கும் அச்சுதானந்தன் - பினராயி விஜயன் பனிப்போர், அச்சுதானந்தன் குற்றச்சாட்டு மூலம் மேலும் பெரிதாகிஉள்ளது.வரும், 4ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. இதில், அச்சுதானந்தன் மீது, கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி, தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.