திரிசூலம்: ""அடுத்த ஐந்து ஆண்டுகளில், சென்னையில் விமான போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம்,'' என, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர், வேணுகோபால் கூறினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற, விமான நிலைய புதிய முனையங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, ஏர் இந்தியா விமானத்தில், சென்னை வந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வேணுகோபால், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
சென்னை விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நவீனப்படுத்தப்பட்ட, புதிய முனையங்கள் இன்று திறக்கப்படுகின்றன. இது ஒரு, தற்காலிக ஏற்பாடு தான். அடுத்த ஐந்து ஆண்டுகளில், சென்னையின் விமான போக்குவரத்து, பலமடங்கு அதிகரிக்கும். இந்த முனையங்கள், அந்த நேரத்திற்குப் போதாது. இதனால், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், ஸ்ரீபெரும்புதூரில், கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்து, விரிவான ஆய்வறிக்கையை, தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்தால், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால், அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் தான், கிரீன் பீல்டு விமான நிலைய திட்டம், தாமதமாகி வருகிறது. தற்போது திறக்கப்பட உள்ள புதிய முனையங்களுக்கு, பெயர் சூட்டுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.