கீழக்கரை : ராமநாதபுரம், கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்த முயன்ற போது, பறிமுதல் செய்யப்பட்ட, 500 ரூபாய் கள்ளநோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை என்ற "திடுக்' தகவல் வெளியாகி உள்ளது.
கீழக்கரை வங்கியில், ஜன., 28 ல், கள்ளநோட்டுகளை செலுத்தியது தொடர்பாக, ஏர்வாடி ஆட்டோ டிரைவர் முகம்மது ஜமிலை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஏர்வாடி செய்யது முகம்மது அல்தாப் என்பவரிடம், கடன் வாங்கியதாக தெரிவித்தார். கடந்த 2010 ஜூலை 28 ல், ராமநாதபுரத்தில் ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், கள்ள நோட்டுகளை, "கியூ' பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் அல்தாப் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
வங்கியில் செலுத்திய கள்ளநோட்டுகளை பார்வையிட்ட, மதுரை சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள், "அவை, பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை' என, உறுதி செய்தனர். சமீபத்தில், சென்னையில், அப்துல் இஸ்மாயில், பாசிம்ராஜா, அப்துல் முனாப் ஆகியோரை, 5 லட்சத்து 3 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன், போலீசார் கைது செய்தனர். அக்கும்பல் மூலம், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான சிலரை, தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.