மதுரை: கூடா நட்பு, வேலையின்மை, ஆடம்பரம் மோகத்தால், கூலிப்படையில் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த 25 வயதிற்குட்பட்டவர்கள், உயிருக்கு பயந்து, சாதாரண வழக்குகளில் சிக்கி சிறைகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன், ரவுடிகள் சிலர் தங்களுக்கு கீழ் ஆட்களை நியமித்து கட்டப்பஞ்சாயத்து செய்தனர். கூலிப்படைகளை பயன்படுத்தி, அரசியல் கொலைகளில் ஈடுபட்டனர். தற்போது பிரபல ரவுடிகளின்
கீழ் இயங்கும் கூலிப்படையினர், தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர். இதனால், பிற கூலிப்படையினரால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக்கருதும், மதுரை கூலிப்படையினர், சாதாரண அடிதடி வழக்குகளில் வழிய சென்று சிக்கி, சிறைகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். "எப்படியாவது ரவுடிகள் மோதலை தடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருந்தால் சரி' என, போலீசாரும் "ஆர்வமாக' கைது செய்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.