ராஜஸ்தான் பா.ஜ., தலைவராகமீண்டும் வசுந்தரா ராஜே நியமனம்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில், இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, மாநில பா.ஜ., தலைவர் பதவிக்கு, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே நியமிக்கப்பட உள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில், 2008ம் ஆண்டு வரை, ஐந்தாண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர், வசுந்தரா ராஜே. அதன்பின், நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததும், ராஜே மீது புகார் கூறப்பட்டது. அவரது ஏதேச்சாதிகார போக்கு, ஊழல் முறைகேடு ஆகியவற்றால் தோற்றதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மாநில பா.ஜ., தலைவராக, அருண் சதுர்வேதி, 2009ம் ஆண்டு ஜூலையில் பதவியேற்றார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, குலாப் சந்த் கடாரியா உள்ளார். இந்நிலையில், "வரும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு, வசுந்தரா ராஜே தான் சரியான நபர், அவருக்கு தனி செல்வாக்கு உள்ளது. அவர் மீண்டும் தலைவராவது அவசியம்' என, அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.தற்போது, டில்லியில், பா.ஜ., உயர்மட்ட குழுவின் கூட்டம் நடந்து வருகிறது. இதில், வசுந்தரா ராஜே, ராஜஸ்தான் மாநில, பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, சில நாட்களுக்கு முன், வசுந்தரா ராஜே டில்லி வந்து, மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசி, ஆலோசனை நடத்தியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Manohar - Trichy,இந்தியா
01-பிப்-201316:35:59 IST Report Abuse
R.Manohar Vasundra Raje Sindhiya is the best choice. BJP will win easily in Rajasthan.
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
01-பிப்-201306:38:41 IST Report Abuse
JALRA JAYRAMAN ஒரு முடிவு எடுத்தால் நாலு பேருக்கு லாபம் நாலு பேருக்கு நஷ்டம் இருக்க தான் செய்யும், அதற்காக முறைகேடு, சர்வதிகாரம் என்பதா? பேரு வரியான மக்களுக்கு நல்லது என்றல் அது தவறில்லை. வேலை செய்பவர்களை சர்வதிகாரி, உழல் பேர்வழி என்பது, எல்லாரயும் கலந்து ஆலோசித்து வேலை செய்பவர்களை விமர்சனம் செய்வது முடிவு எடுக்க திராணி இல்லாதவர் என்று. மனிதன் என்றல் இப்படி அப்படி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்