வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு பயப்படும் போலீசார்: ராமதாஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திண்டுக்கல்: ""வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்படுவோம் என்ற பயத்தில்தான் பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யும் தலித்துகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை கண்டித்து, அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

இதில் பங்கேற்க வந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: தென் மாவட்டத்தில்தான் இந்த சட்டத்தால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைத்து பிரிவினரையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்தில் செயல்படுபவர்களைத்தான் எதிர்க்கிறோம். மத்திய அரசு இந்த சட்டத்தில் கண்டிப்பாக திருத்தம் செய்யவேண்டும். இதற்காக ஒரு கோடி துண்டு பிரசுரங்களை அச்சடித்து அதை அனைவருக்கும் வினியோகம் செய்து வருகிறோம். இதன் மூலம் அனைத்து சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யும் தலித்துகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகின்றனர்.
இதற்கு காரணம் தங்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்து விடும் என்று பயப்படுகின்றனர்.
4 ஆண்டுகளில் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை தொகுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து தகவல்களையும் திரட்டிய பின்பு மத்திய, மாநில அரசுகளை சந்தித்து சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவோம், என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
02-பிப்-201300:08:09 IST Report Abuse
பொன்மலை ராஜா "4 ஆண்டுகளில் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை தொகுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து தகவல்களையும் திரட்டிய பின்பு மத்திய, மாநில அரசுகளை சந்தித்து சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்", என்கிறார் இராமதாஸ். ... இதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் பிரச்சனை என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலே சட்டத் திருத்தம் என்ற தீர்வை முன்வைத்து செயல்படுகிறார்கள். அதற்கு ஏற்ற வகையில் புள்ளிவிவரங்களை திரட்டுகிறார்கள். ... இராமதாஸ் அவர்களே, இனியாவது நீங்கள் திட்டமிட்டுள்ள தீர்வுக்காக பிரச்சனைகளைத் தேடாதீர்கள். நடைபெறுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வினைத் திட்டமிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
guna - hosur,இந்தியா
01-பிப்-201318:19:20 IST Report Abuse
guna mr ramadass is a great political leader in tamilnadu,
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
01-பிப்-201301:46:04 IST Report Abuse
Kumar சிக்குன்குனியா திரும்பவும் வேகமாகப் பரவுகிறதாமே டாக்டரை கட்டுப்படுத்தினால் நோயும் கட்டுப்படும் என்கிற பழமொழி நினைவுக்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்