தேனி : தேனி மாவட்டத்தில், ஒண்ணரை லட்சம் ஏக்கர் பரப்பில் மேகமலை வன உயிரின காப்பகமும், ஒண்ணரை லட்சம் ஏக்கர் பரப்பில் வன நிலங்களும் உள்ளன. வனத்திற்குள் தீ வைக்கும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு புதிய புல் வளர வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வளர்ந்த புற்களை தீ வைக்கின்றனர்.
வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடாமல் தடுக்க விவசாயிகளே சிலர், தங்கள் நிலத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் தீ வைக்கின்றனர். இதனால் அரிய வகை வன விலங்குகளும் அழிந்து விடுகிறது. வனத்திற்குள் தீ பிடித்தால், வனத்துறையினர் அங்கு செல்வதற்கே 12 மணி நேரத்திற்கும் மேல் ஆகி விடுகிறது. அதற்கு பின்னர், தீயை அணைக்க போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. இதனால், தீ வைப்பவர்களை தடுக்க, வனத்துறை குழுக்களை அமைத்துள்ளது. இவர்கள் வனக் கிராமங்களுக்குள் "போர்டுகள்' வைத்து, அதில் வன அதிகாரிகள், வனவர்கள் ஆகியோரின் மொபைல் எண்களை எழுதி வைத்துள்ளனர். வனத்திற்குள் தீ பிடித்தால், உடனே தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். போடி ரேஞ்சர் ராஜேந்திரன் கூறுகையில்,"" வனத்திற்குள் தீ வைப்பவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமின் பெற முடியாது. தவிர 6 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.