வாஷிங்டன்:அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக ஜான் கெர்ரி தேர்வு செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள ஹிலாரி கிளின்டன், இன்று ஓய்வு பெறுகிறார். அமெரிக்க அதிபராக ஒபாமா, இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட போது, அவர் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சர் பதவியில், ஹிலாரி தொடர மறுத்து விட்டார்.
இதையடுத்து, முன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜான் கெர்ரியை, புதிய வெளியுறவு அமைச்சராக ஒபாமா அறிவித்தார். இந்த நியமனத்தை அங்கீகரிக்கும் ஓட்டெடுப்பு, அமெரிக்க செனட்டில், நேற்று முன்தினம் நடந்தது.ஜான் கெர்ரி வெளியுறவு அமைச்சராவதற்கு ஆதரவாக, 94 ஓட்டுகளும், எதிர்த்து மூன்று ஓட்டுக்களும் போடப்பட்டன.வியட்நாம் போரில் முக்கிய பங்காற்றிய ஜான் கெர்ரி, அமெரிக்க செனட்டில் வெளியுறவு கமிட்டி தலைவராக உள்ளார். ஈராக்கிலிருந்து, அமெரிக்க படை வாபஸ் பெறுவதற்கு, இவர் உதவியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.