சின்னமனூர் : நகராட்சிகளின் வருவாயில், ஊழியர்களின் சம்பளத்திற்கு செலவிடும் தொகையை, 65 சதவீதமாக உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் நிலை, முதல்நிலை, தேர்வுநிலை, சிறப்புநிலைகளில் 140 நகராட்சிகள் உள்ளன. நக ராட்சி வரி வருவாயில் இருந்து தான், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. சொத்து, தொழில், குடிநீர் வரிகள், மாநில நிதிக்குழு மானியம் உள்ளிட்டவை நகராட்சிகளின் வருவாய். கடந்த 2003 க்கு முன், நகராட்சியின் வருவாயில், சம்பளத்திற்காக எவ்வளவு தொகையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், வருவாயில் 90 சதவீதம் வரை, சம்பளத்திற்காகவும், புது பணியிடம் நிரப்புவதற்காகவும் செலவிடப்பட்டது; மீதமுள்ள நிதியில், அத்தியாவசிய பணிகள் செய்யப்பட்டன. பணியிடங்களை, தங்கள் இஷ்டத்திற்கு நிரப்பிக் கொண்டதால், பல நகராட்சிகள், சம்பளம் வழங்க முடியாமல் திணறின. இதனால், வரிவருவாயில் 49 சதவீதம் மட்டுமே சம்பளத்திற்கும், புது பணியிடம் நிரப்புவதற்கும் பயன்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இந்த நடைமுறையால், 10 ஆண்டுகளாக, நகராட்சிகளில், பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருந்தது. தற்போது, இந்நடைமுறையில் புதுதிருத்தத்தை, அரசு அறிவித்துள்ளது. நகராட்சிகளின் மொத்த வருவாயில், 65 சதவீதம் வரை, சம்பளத்திற்கும், புது நியமனத்திற்கும் ஒதுக்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இதுவரை, காலியாக இருந்த பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.