ராஜபாளையம் : சென்னை - செங்கோட்டை இடையே செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த, விவசாயி நெஞ்சு வலியால் இறந்தார். திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவலை சேர்ந்தவர் பூலிதேவர், 50. விவசாயி. இவர், நெஞ்சுவலிக்காக, திருநெல்வேலி மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை சென்ற பூலித்தேவர், நேற்று முன்தினம் இரவு, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவில்லாத பெட்டியில், சாமான்கள் வைக்கும் மேல்தட்டில் படுத்து, நெல்லை நோக்கி வந்தார். மறுநாள் காலை, ராஜபாளையம் அருகே ரயில் வந்தபோது, அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்காததால், சந்தேமடைந்த சக பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், ராஜபாளையம் ஸ்டேஷனில், டாக்டருடன் சென்று பரிசோதனை செய்ததில், அவர் இறந்துவிட்டது தெரிந்தது. பூலித்தேவர் உடல் ராஜபாளையத்தில் இறக்கப்பட்டு, அவரது பையில் இருந்த மொபைல் எண் மூலம், அவரது மனைவி முத்தம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நேற்று மதியம் 12.45 மணிக்கு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால்,நேற்று காலை 7.30 க்கு ராஜபாளையம் வந்த பொதிகை ரயில், 45 நிமிடம் தாமதமாக, 8.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.