Fishermen missing | படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் மாயம்

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பொழிக்கரையை சேர்ந்தைவர் ஆன்டணி பிரான்சிஸ். இவரது மோட்டார் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ்,60, ரூபர்ட்,49 ரமேஷ்,40, ஜேம்ஸ்,45, மரியபென்சிகர்,60 ஆகிய அறு பேரும் நேற்று முன்தினம் மாலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது சூறைக்காற்று வீசியது. இதில் படகு கவிழ்ந்தது. இதில் ஜேம்ஸ், பிரான்சிஸ், ரமேஷ், மரிய பென்சிகர் ஆகிய ஐந்து பேரும் கடலில் விழுந்தனர். படகில் இருந்த ஆன்டணி பிரான்சிஸ் மீன்பிடிக்கும் வலையை வீசி இவர்களை காப்பாற்ற முயன்ற போது, காற்று படகை வேறு திசைக்கு இழுத்து சென்றது. கடலில் தத்தளித்த ஐந்து பேரும் ஒருவருக்கு ஒருவர் கை கோர்த்த படி படகில் ஏறமுயன்றனர். ஆனால் ரூபர்ட்டும், மரியபென்சிகரும் மட்டுமே படகில் ஏறமுடிந்தது. ஜேம்ஸ், பிரான்சிஸ், ரமேஷ் ஆகிய மூவரும் கடலில் மூழ்கினர். இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை