Advertisement
திண்டுக்கல்லில் ராமதாஸ் நுழைய தடை கோரி மனு : அரசு பதிலளிக்க உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:06

மதுரை : திண்டுக்கல்லில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நுழைய தடை கோரிய வழக்கில், அரசுத்தரப்பு பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த வில்லவன் கோதை தாக்கல் செய்த மனு: பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், மக்களிடம் ஜாதி உணர்வை தூண்டும் வகையில் செயல்படுகிறார். மதுரை, ராமநாதபுரம், கடலூர், கன்னியாகுமரியில் அவர் கூட்டங்கள் நடத்த 144 தடையுத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அவர், கூட்டம் நடத்தும் பகுதிகளில் பொது அமைதி பாதிக்கிறது. திண்டுக்கல்லில் இன்று (நேற்று) கூட்டம் நடத்தப்போவதாக, ராமதாஸ் அறிவித்துள்ளார். அவரை, அனுமதிக்கக்கூடாது என திண்டுக்கல் கலெக்டரிடம் ஜன.,29 ல் மனு அளித்தோம். அவர், நடவடிக்கை எடுப்பாரா? என சந்தேகம் உள்ளது. திண்டுக்கல்லில் கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சண்முகராஜ் ஆஜரானார். நீதிபதிகள், "கலெக்டர் மீது மனுதாரர் புகார் கூறியது பற்றி, அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய வேண்டும். விசாரணை பிப்., 8 க்கு தள்ளி வைக்கப்படுகிறது,' என்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.