Ramdoss talks about marriage | பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் : ராமதாஸ் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் : ராமதாஸ் வலியுறுத்தல்

Added : பிப் 01, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விருதுநகர் : ""பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் நடத்த வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும்,'' என விருதுநகரில் பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

விருதுநகரில் நடந்த, அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த, அவர் கூறியதாவது: காதல் நாடகத்தால், பெண்களின் மனதை மாற்றி, பெற்றோரிடம் பேரம் பேசி பணம் பறிக்கின்றனர். இந்த புள்ளி விபரங்களை, மத்திய மாநில அரசிற்கு அனுப்ப உள்ளோம். வன்கொடுமை சட்ட திருத்தம் குறித்து, டில்லியில் பிரதமர், அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து பேசுவோம். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் என்பதை, சட்டமாகக்க வேண்டும்.
சிலர் எங்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டுகின்றனர், நாங்கள் வெள்ளை கொடியை தான் காட்டுகிறோம். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பெற்றோர் குறித்து, ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், என்றார்.

307 பேர் கைது: அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில், ராமதாஸ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் கூட்டமைப்பு, தமிழ் புலிகள், ஆதி தமிழர் பேரவை, அம்பேத்கார் மக்கள் இயக்கம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் சார்பில்,விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன், தேசபந்து மைதானம், கலெக்டர் அலுவலக வாசல், சாத்தூர் டோல்கேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ராமதாஸ் எதிராக கோஷம் எழுப்பி, கருப்பு கொடி காட்டி, அவரது உருவ பொம்மையை எரித்து, அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி., மகேஸ்வரன் உத்தரவின்படி, டி.எஸ்.பி., க்கள் ராமமூர்த்தி, சின்னையா தலைமையிலான போலீசார், 10 பெண்கள் உட்பட 307 பேரை கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
02-பிப்-201300:36:53 IST Report Abuse
பொன்மலை ராஜா பிஞ்சிலேயே பழுத்தவர்களின் குற்ற செயல்களை தண்டிக்க 14 வயதை தாண்டினால் மேஜர் என்று சட்டம் இயற்றலாம் ... காதல் என நடித்து ஏமாற்றுவதை தடுக்க திருமண வயதை 21 என சட்டத்தில் நிர்ணயித்து விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தலாம் ... ஆனால் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் என்பது சட்டமாக்கப்படுவதில் பாதகங்கள் சில உள்ளன ... பெற்றோர் இல்லாதவர்கள் யாரிடம் சம்மதம் பெறுவது ... பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் வாழும் பெற்றோர் திருமண ஏற்பாட்டில் ஈடுபாடு காட்டாமல் பிள்ளைகளின் விரகதாபங்களை அதிகரிக்க வைத்து அதினாலும் குற்றங்கள் அதிகமாகலாம் ... முறைகேடான கள்ள உறவுகள் பெருகிடலாம் ... வெகு தாமதமான வயதில் உருவாகும் திருமண பந்தங்களினால் ஆரோக்கியக் குறைவான தாய்மார்கள் பிள்ளைகள் உருவாகலாம் ... இது போல் இன்னும் பல பாதிப்புகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு என்பதை திட்டவட்டமாக இராமதாஸ் மறுக்க முடியுமா
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
01-பிப்-201313:44:15 IST Report Abuse
samuelmuthiahraj எதிர்ப்புகள் தற்போது ஆங்காங்கு வந்தாலும் அனைத்து சமுதாய மக்களுமே இந்த ஒரு விடயத்தில் காலப்போக்கில் மம்,ருத்துவர் ராமதாஸ் கூற்று சரியானதாகவே ஒத்துக்கொள்வர்.ஏனெனில் உதாசினப்படுத்துதல் பெற்றோரை என்பது பெரிய அவமானம் மட்டுமல்ல பிற்பாடு சம்பந்தப்பட்ட காதல் தம்பதியரே,அவசரப்பட்டு விட்டோமே என்று எண்ணி வருந்துவர்.ஏனெனில் பெற்றோரது சம்மதம் இன்றி உண்மையான நன்மைகளும் மேன்மைகளும் வாழ்வில் கிட்டுவது கடினம் தகப்பன் புத்தியைக் கேள் தாயின் போதகத்தை தள்ளாதே உன் வாழ் நாள் நீடித்திருக்க பெற்றோரை கனம் பண்ணு என்ற பண்டைய நீதியான மொழிகளை வாழ்வில் கடைபிடிப்பதே சாலச் சிறந்தது
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
01-பிப்-201310:26:12 IST Report Abuse
rajan டவுசரு இதினை காலம் நீங்க பேசினதுல இது ஒண்ணு தான் உருப்படியான கருத்து. ஒரு சின்ன திருத்தம் இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்தின் பேரில் தான் காதல் திருமணம் நடக்க வேண்டும் என்பததை சட்டம் ஆக்குவது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியம். ஏகப்பட்ட சமுக சீர்கேடுகளை இதன் மூலம் களையலாம்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-பிப்-201306:49:07 IST Report Abuse
Lion Drsekar மருத்துவர் ஐயா அவர்களே, தங்கள் கருத்து மிக மிக அருமையாக இருக்கிறது .பட்டினத்தில் வசிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் பிரிந்து எங்கெங்கோ எப்படீப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கும்போது தங்களின் நல்ல கருத்துக்கள் மேற்கொண்டு கூறினால் நமக்கே ஆபத்தாக முடியும் வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
01-பிப்-201301:27:50 IST Report Abuse
தமிழ் சிங்கம் ராமதாஸ் கீழ்பாக்கம் போகவேண்டிய நேரம் வந்தாச்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை