திருநெல்வேலி: கணவனுக்கு சோற்றில் விஷம் வைத்த பெண் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி, வள்ளியூர் அருகே ஆனைகுளத்தை சேர்ந்த ராமையா மகன் துர்க்கைமுத்து 38. கால்நடைகளை மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். துர்க்கை முத்துவின் தங்கையின் கணவர் இறந்துவிட்டதால், தங்கை தற்போது துர்க்கை முத்துவின் வீட்டிற்கு வந்துவிட்டார். கணவரின் தங்கை, தமது வீட்டில் வசிப்பது துர்க்கைமுத்துவின் மனைவி இசக்கியம்மாளுக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலையில் துர்க்கைமுத்து மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். கணவருக்கு, இசக்கியம்மாள் தூக்குவாளியில் சாப்பாடு கொடுத்துவிட்டார். மதியம் நடுக்காட்டுக்குள் வைத்து சாப்பிட துவங்கினார். சோற்றில் கசப்பு தெரிந்ததால் மேற்கொண்டு சாப்பிடாமல் கொண்டுவந்துவிட்டார். மனைவியிடம் கேட்டபோது, சோற்றில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டார். துர்க்கைமுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வள்ளியூர் போலீசார், இசக்கியம்மாள் மீது கொலைமுயற்சி வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.