ராமநாதபுரம் : "விஸ்வரூபம்' பட விவகாரத்தில் ராமநாதபுரம் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். "விஸ்வரூபம்' படம் வெளியிட இருந்த ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சினிமா தியேட்டரில், நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு, கற்கள் வீசினர். இதில் தியேட்டர் காம்பவுண்ட் சுவர் மீது பெட்ரோல் குண்டு விழுந்து தீக்கரையானது. முன்புற கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக, கேணிக்கரை போலீசார், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் முகமது தாஜூதீன், 19, மீன்கார தெரு அகமது அலி, 19, பட்டரைகார தெரு முகமது ரிபாஹிம், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.