E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அசைவம் சாப்பிடுபவர்களுக்கு இருதய கோளாறு ஆபத்து அதிகம்:லண்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், "பகீர்' தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:13

லண்டன்:"அசைவம் சாப்பிடுபவர்களைக் காட்டிலும், சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இருதயக்கோளாறுகள் ஏற்படுவது மிகவும் குறைவு' என, பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அசைவம் மற்றும் சைவ உணவு வகைகளை சாப்பிடுபவர்கள் மத்தியில், யாருக்கு இருதயக்கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறித்த ஆய்வு ஒன்று, சமீபத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது.

இதில், சைவப் பிரியர்களுக்கு, 32 சதவீதம் வரை, இருதயக்கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே என, கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பிரான்செசா குரோனியே மற்றும் டிம் கே ஆகியோர் கூறியதாவது:இருதயக்கோளாறுகளுக்கு முக்கியக் காரணம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேருதல் மற்றும் ரத்தக் கொதிப்பு ஆகியவைதான். இதில், இருதயநோய் ஏற்படாமல் தடுப்பதில், உணவுக்கட்டுப்பாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்னைகள் மிக மிக குறைவு.அதே நேரத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். காரணம், அதிகபட்சமான கொழுப்பு ரத்தத்தில் சேருவதும், ரத்தக்கொதிப்பு அதிகரிப்பதும் தான். சாதாரணமாக, சர்க்கரை நோயாளிகள் நீங்கலாக, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமன் பிரச்னைகள் கூட அவ்வளவாக ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இது குறித்து, டில்லியை சேர்ந்த, இருதய நோய் நிபுணர் கே,கே. அகர்வால் கூறியதாவது:இந்தியர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்களாகத்தான் உள்ளனர். அதனால், இருதய நோய்களுக்கு எளிதாக ஆட்படுகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியர்களே அதிக அளவில் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில், ஓராண்டில், 24 லட்சம் பேர், இருதயக் கோளாறுக்கு பலியாகின்றனர்.எனவே, இறைச்சி சாப்பிடுவதற்கு பதிலாக, மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, கடல் உணவுவகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம், இருதயக் கோளாறுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவ்வாறு அகர்வால் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.