மதுரை : உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டியில், கிடா சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மாமரத்துப்பட்டி ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: பொங்கலையொட்டி ஆண்டுதோறும், மாமரத்துப்பட்டியில் கிடா சண்டை போட்டி நடத்துகிறோம். ஜன.,25 ல் நடத்த அனுமதிக்குமாறு, இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தோம். அவர்,"பிராணிகள் வதை தடுப்புச் சட்டப்படி அனுமதிக்க முடியாது. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்,' என மறுத்து விட்டார்.
இது, இரு ஆட்டுக் கிடாக்கள் பங்கேற்கும் போட்டி. அவற்றிற்கு முறையாக பயிற்சி அளித்துள்ளோம். கிடாக்களை துன்புறுத்தமாட்டோம். இதுவரை சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதில்லை. போட்டியை காண சுற்றுலா பயணிகள் வருவர். கிடா சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சதீஷ் ஆஜரானார். மதுரை கலெக்டர், உசிலம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.