நாக்பூர்: வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரியிடம், வருமான வரித்துறை இயக்குனர் நேற்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை, நான்கு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
மகாராஷ்டிராவில், பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், 1995 முதல் 1999 வரை, பொதுப்பணித் துறை அமைச்சராக கட்காரி இருந்தபோது, ஏராளமான ஒப்பந்தங்களை, "ஐடியல் ரோடு பில்டர்ஸ்' நிறுவனம் பெற்றது.
அதற்குப் பிரதிபலனாக, கட்காரியின் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அத்துடன் வேறு பல நிறுவனங்களும், போலி பெயரில், கட்காரி நிறுவனத்தில், பெருமளவு முதலீடு செய்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.இதையொட்டி, நிதின் கட்காரிக்கு சொந்தமான, புர்தி மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு வந்த நிதிகள் மற்றும் அந்த நிறுவனத்தில், முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்த விசாரணையை, வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கினர்.அத்துடன், புர்தி மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு வந்த நிதி ஆதாரங்கள் மற்றும் அந்த நிறுவனத்தில், முதலீடு செய்த, 18 கம்பெனிகள் குறித்த விசாரணையும் நடைபெற்றது.
பல போலி நிறுவனங்கள் பெயரில், புர்தியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, கட்காரி மீது, வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கட்காரி, புர்தி நிறுவனத்திலிருந்து, தான் ஏற்கனவே விலகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நாக்பூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று நேரில் ஆஜரான நிதின் கட்காரியிடம், வருமான வரித்துறை இயக்குனர் (புலனாய்வு) கீதா ரவிச்சந்திரன், நான்கு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார்.அப்போது, புர்தி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுடன் நடந்த மற்ற பரிவர்த்தனைகள் குறித்து கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சம்பளம் மற்றும் பென்சன் வாங்குபவரை வதைப்பதை விட்டு விட்டு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் பணமுதலைகளை வருமான வரித்துறையினர் துரத்தி பிடிக்க வேண்டும்ஈரோட்டில் மாதந்தோறும் லட்ச கணக்கில் வீடு மற்றும் கடை வாடகை பெறுபவர்கள் ஏராளம்இவர்களெல்லாம் ஒழுங்காக கணக்கு காட்டி வரி செலுத்துகிறார்களா ?இதனை வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளுதல் அவசியம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.