E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பழைய அரசு ஆணைகள் இல்லாததால் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:17

விருதுநகர்: கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது .இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. கருவூலகங்களில் உள்ள சம்பள பில்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் , சம்பளம் வழங்குவதற்கான அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்படும். 1980 க்கு முன் உள்ள பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக ஆசிரியர் நியமித்தும், சம்பளம் வழங்க அனுமதியளித்தும், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, பள்ளிகளிலே சம்பள பில் தயாரித்து, கருவூலகங்களுக்கு அனுப்பப்படும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து, இ.சி.எஸ்., முறையில் நிதி விடுவித்து, அந்தந்த ஆசிரியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆசிரியர்களும் வங்கி கணக்கில் இருந்து, ஏ.டி.எம்., கார்டு மூலமாக சம்பளம் பெற்று வந்தனர்.
இந் நிலையில், கருவூலகங்கள் யாவும் கம்ப்யூட்டர் மயமாவதால், சம்பள அனுமதி வழங்கிய ஒரிஜினல் அரசு உத்தரவு வழங்கும் படி, ஆசிரியர்களிடம் கேட்டு வருகின்றனர். ஆசிரியர்களோ, நிலையாக ஒரே பள்ளியில் இல்லாமல், ஆண்டுக்காண்டு இட மாறுதல் பெற்று, பணி புரிந்து வருகின்றனர். இந்த உத்தரவோ பள்ளிகளில் முறையாக பாதுகாக்கப்படாமல், உத்தரவு கடிதங்கள் அனைத்தும் நைந்து, சிதைந்து விட்டன. பழைய உத்தரவு இல்லாததால், சம்பள பில் வழங்க முடியாது என ,கருவூலகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது, பழைய உத்தரவு நகல்கள் இல்லாததால், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.