பழநி : பழநியில் நடந்துசென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். பழநிடவுன் தேரடிவீதியைச்சேர்ந்த பழனிச்சாமி மனைவி விஜயகுமாரி,68. பல்வலிக்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, இருசக்கரவாகனத்தில் வந்த 24 வயது மதிக்கதக்க இருவர் அவரை வழிமறித்து, "ஏன் பாட்டியம்மா நீங்க இவ்வளவு நகையை அணிந்து பட்டபகலில் தனியாக வரலாமா, செய்தித்தாள் படிப்பது கிடையாதா, நிறைய வழிப்பறி நடக்குது, நகைகளை கழற்றி கொடுங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம்' என போலீசார் தோரணையில் கூறியுள்ளனர். இதில் குழப்பமடைந்த விஜயகுமாரி தங்க சங்கிலி, தாலிக்கொடி, வளையல்கள் ஆகியவற்றை தந்துள்ளார். அதனை வாங்கிய இளைஞர்கள் பொட்டலமாக மடித்து கொடுத்தவர்கள் வேகமாக இருசக்கரவாகனத்தில் சென்றுவிட்டனர். பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகைகளுக்கு பதில் வெறும் கல்,மண் இருந்ததை பார்த்து விஜயகுமாரி மயக்கமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மூலம் பழநி நகர் போலீசில் புகார் செய்தார். பழநியில் தொடரும் இச்சம்பவங்களால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாதிக்கப் பட்ட யாரும் புகார் கொடுக்க முன் வராததால் போலீசார் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.