நெல் கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு, இதுவரை, அரசிடம் இருந்து உத்தரவு வராததால், சேமிப்பு குடோன்களுக்கு நெல்வரத்து இல்லை.இதனால், குடோன்கள் காற்று வாங்குகின்றன. கொள்முதல் இல்லாததால், ரேஷன் அரிசி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், மாவட்டந்தோறும், விவசாயிகளிடமிருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால், நெல் கொள்முதல் செய்யப்பட்டு, குடோன்ககளில் சேமித்து வைக்கப்படும்.
இந்த நெல், அரசு உத்தரவின்படி, அரவை மில்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தாலுகா அளவில் உள்ள,சேமிப்பு குடோன்களுக்கு, அரிசியாக அனுப்பப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலம், ரேஷன் கடைகளுக்கு செல்லும்.
ஒவ்வொரு ஆண்டும், டிச.,15ல் இருந்து, பிப்., கடைசி வரை, நெல் வரத்து இருக்கும். சராசரியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 50 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படும். முதல் ரக நெல்லான டீலக்ஸ் பொன்னி, கல்சர், ஆடுதுறை 36, ஐ.ஆர்.20, 50 ஆகியவை, வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டாம்
ரகமான ஜோதி, சி.ஆர்.1009, நுகர்பொருள் வாணிபக் கழகத்தால்,கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு சேமிப்பு குடோன்களுக்கு, 90 சதவீதம் பொது ரகம் எனப்படும், இரண்டாம் ரக நெல் வகை மட்டுமே வருகிறது. இந்த ஆண்டு விவசாயம் இல்லாததால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, இதுவரை, கொள்முதலுக்கான உத்தரவு
வழங்கப்படவில்லை. இதனால், குடோன்களில் உள்ள அலுவலர்கள், வேறு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாவலுக்கு மட்டும், இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையில், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே, ரேஷனில், உளுந்து, பருப்பு, பாமாயில் வழங்குவது, நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், கோடை காலத்தில், நெல் கொள்முதல் இல்லாததால், ரேஷன் அரிசி வழங்குவதிலும், கட்டுப்பாடு விதிக்கும் நிலை வரும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.