E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிய பஸ்கள் கொள்முதல்: கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:23

நகர்ப்புறங்களை மேம்படுத்த, மத்திய அரசு அளிக்கும் நிதியிலிருந்து, கூடுதல் பஸ் கட்டணத்தை வசூலிக்க ஏதுவாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள், புதிய பஸ்களை வாங்குகின்றன. இதனால், மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில், மக்கள் மீது
கூடுதல் வரி விதிப்பது போல், நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் சார்பில், மாநகராட்சிப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு, நிதி அளிக்கப்படுகிறது.

அடிப்படை கட்டமைப்பு : வசதிகளான சாலை, குடிநீர் வினியோகம், கழிவறை, மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை, தொலைத் தொடர்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்த, திட்ட நிதி செலவிடப்படுகிறது.

திட்ட வரைவு : தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 2012-13ம் நிதியாண்டில், 2,250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிதியிலிருந்து, மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து
வசதியை அதிகரிக்க, போக்கு வரத்துக் கழகங்களுக்கு பஸ்கள் வாங்கப்படுகின்றன. சென்னை, கோவை, மதுரை நகரங்களில், ஏற்கனவே, இத்திட்டத்தின் கீழ் பஸ்கள் வாங்கப்பட்டு இயக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில், இது போன்ற பஸ்களை வாங்க திட்டமிட்டு, அதற்கான விரிவான திட்ட முன்வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட முன்வரைவுக்கு, 63.34 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. தேசிய நகரப்புற புனரமைப்பு திட்டத்தின், முகமை நிறுவனமான, தமிழக நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், திட்ட முன்வரைவை தயார் செய்யும் பணியை செய்துள்ளது.

எந்தவகை பஸ்கள் : திட்ட முன் வரைவு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்ட இயக்கத்துக்கு அளித்து, அனுமதி பெற்று, பஸ்கள் வாங்கும் பணி துவங்கும் என, போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இத்திட்டத்தில் வாங்கப்படும் பஸ்கள், தாழ்தள பஸ்கள், டீலக்ஸ், சொகுசு பஸ்கள் என்ற பிரிவில் வாங்கப்படுகின்றன. இதற்கான, பஸ் கட்டணம், சாதாரண பஸ் கட்டணத்தை விட, 40 முதல் 60 சதவீதம் வரை, கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மாநகரப் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தவே,
மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படுகிறது. எனவே, கூடுதல் வசதிகள் கொண்ட பஸ்களை வாங்குகிறோம்.
அவற்றுக்கான, கட்டணத்தை அரசு நிர்ணயிக்கிறது. போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் என்பதால், கூடுதல் வசதிகளைக் கொண்ட பஸ்களை இயக்குகிறோம். இதற்கு, திட்டத்தின் நெறி முறைகள் வழிகாட்டுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்டமிட்ட உயர்வு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் தரப்பில் கூறியதாவது:
கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் தான், அரசு புதிய பஸ்களை வாங்குகிறது. ஏற்கனவே, பஸ் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. எல்லாமே கூடுதல் கூடுதல் வசதி என்ற பெயரில் இயக்கப்படும் பஸ்களின்
எண்ணிக்கை, சாதாரண கட்டண பஸ்களை விட அதிகமாக உள்ளன. ஒரு பகுதியில், 70 முதல் 80 சதவீதம் பஸ்கள், கூடுதல்
கட்டண பஸ்களாகவே இயங்குகின்றன. மக்கள் மீது, கட்டண சுமையை அதிகரிக்கும் வகையில், தேசிய நகரப்புற புனரமைப்புத் திட்டத்தில் பஸ்களை வாங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.