தமிழகத்தில், நாளுக்கு நாள், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்து வருகிறது. இதனால், நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளில், அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பின், நீலத்தடி நீர்மட்ட ஆய்வு பிரிவு, ஒவ்வொரு மாதமும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்யும்; ஆய்வறிக்கையை, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் அரசுக்கு அளிக்கும். அதன் மூலம், நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து, அரசு முடிவு செய்யும். தற்போது, நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு, பெரிய அளவில் குறைந்துள்ளதாக, நவம்பர் மாத ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. நவம்பர் மாத ஆய்வில், கடந்த ஆண்டு, 5.79 மீட்டராக இருந்த, பெரம்பலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம், 3.56 மீட்டராக குறைந்துள்ளது. 11 மீட்டராக இருந்த, திருப்பூர் மாவட்ட அளவு, 7.95
மீட்டராக உள்ளது. மேலும், 9.6, 6.45, 9.82 மீட்டர்களாக இருந்த, ஈரோடு, பெரம்பலூர், கோயம்புத்தூர் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்ட அளவு, முறையே, 6.74, 4.11, 6.74 மீட்டர்களாக குறைந்துள்ளது. அதே போல், ஐந்து மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3.05 மீட்டரும், திருநெல்வேலி மாவட்டத்தில், 0.75 மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 66 மி.மீ., யும், நாகப்பட்டணத்தில், 36 மி.மீ.,யும், திருவள்ளூர் மாவட்டத்தில், 2 மி.மீ., யும் அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சென்ற ஆண்டு இருந்த, நீர்மட்டத்தின் அளவான, 5.69 மீட்டர், அதே அளவே இன்றும் உள்ளது. இது குறித்து, பொதுப்பணித்துறை நிலத்தடி நீர்மட்ட ஆய்வு அதிகாரிகள் கூறுகையில், "தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனதே, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதற்கு காரணம். அதை எந்தெந்த வகையில் சரிசெய்வது என்பது குறித்து, ஆலோசனை செய்து வருகிறோம்' என்றனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.