New entrance for ooty tourist spots | சுற்றுலா தலங்களில் இன்று முதல் புதிய கட்டணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலங்களில் இன்று முதல் புதிய கட்டணம்

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஊட்டி: தோட்டக்கலை துறை பணியாளர்களின் கூலி உயர்வு, இடு பொருட்கள் விலையேற்றம் போன்ற காரணங்களால், நீலகிரி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள, தோட்டக்கலை சுற்றுலா தலங்களில், நுழைவு கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா ஆகியவை, தோட்டக்கலை துறையின் பராமரிப்பில் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு, நாட்டின் பல இடங்களில் இருந்து, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, இன்று முதல் நுழைவு கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
அதன் படி, பெரியவர்களுக்கு, 30 ரூபாய், சிறியவர்களுக்கு, 15 ரூபாய், கேமரா எடுத்துச் செல்ல, 50 ரூபாய், வீடியோ கேமரா எடுத்துச் செல்ல, 100 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.

நீலகிரி தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மோகன் கூறியதாவது: தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்கா உட்பட சுற்றுலா தலங்களில், 600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், ஆண் தொழிலாளர்களுக்கு, 100 ரூபாய், பெண் தொழிலாளர்களுக்கு, 85 ரூபாய் தினக்கூலி வழங்கப்பட்டு வந்தது.
கடந்த மூன்று மாதமாக, ஆண் தொழிலாளர்களுக்கு, 200, பெண் தொழிலாளர்களுக்கு, 175 ரூபாய் என, கூலி உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, பூங்காவில் உள்ள செடி, தாவர இனங்களை வளர்க்க, பராமரிக்க தேவையான உரம், பூச்சி கொல்லி மருந்து உட்பட இடுபொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இத்தகைய செலவுகளை ஈடு கட்டும் நோக்கில், நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு, கொடைக்கானல், குற்றாலம் என, மாநிலத்தின் பிற இடங்களில், தோட்டக்கலை துறை பராமரிப்பில் உள்ள, சுற்றுலா தலங்களிலும் நுழைவு கட்டணம் உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை