சிட்னி:அரசு பணத்தை கையாடல் செய்து, செக்ஸ் தொழிலாளர்களுடன் கும்மாளம் அடித்த, ஆஸ்திரேலிய எம்.பி., கைது செய்யப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்த எம்.பி., கிரெய் தாம்சன், 48. ஆளும் கட்சி எம்.பி.,யாக இருந்த இவர், சுகாதாரத் துறை பணத்தை சுருட்டி, பல்வேறு கேளிக்கை கொண்டாட்டங்களில் செலவழித்துள்ளார். இது தொடர்பாக, இவர் மீது, 150 வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, இவர் ஆளும் கட்சியிலிருந்து, கடந்த ஆண்டு, நீக்கப்பட்டார். தற்போது இவர், சுயேச்சை எம்.பி.,யாக உள்ளார். அரசு பணத்தை, 60 லட்சம் சுருட்டி, செக்ஸ் தொழிலாளர்களுடன் கும்மாளம் அடித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.கோர்ட்டில் சரணடையும் படி, இவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அதை மதிக்காததால், நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது இவர் ஜாமின் கோரி மனு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும், 7ம்தேதி நடைபெற உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.