கடலூர்: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதித்துள்ள தடை உத்தரவை நீக்குமாறு கமல் நற்பணி இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு 15 நாள் தடை விதித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கடலூர் கமல் நற்பணி இயக்கத்தினர், மாவட்ட பொறுப்பாளர் ரவி தலைமையில் 15 பேர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில்,"விஸ்வரூபம் திரைப்படத்தின் தடை உத்தரவை நீக்கி, மாவட்டத்தில் அனைத்து திரையரங்குளிலும் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.