CM begins welfare works | ரூ.117 கோடியில் திட்டப்பணி முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.117 கோடியில் திட்டப்பணி முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பணிகள் முடிவடைந்த, 117 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, "வீடியோ கான்பரன்சிங்' மூலம், முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, வீட்டுவசதித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக, 117 கோடி ரூபாயில், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை, ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
சென்னை அடையாற்றின் குறுக்கே, 15.64 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மூன்று வழித்தடப் பாதை பாலம், மதுராந்தகம் ரயில்வே மேம்பாலம், வேலூர் வாழைப்பந்தல் பாலம், திருவண்ணாமலை நாராயணகுப்பம் பாலம், திருவக்கரை உயர்மட்டப் பாலம் உள்ளிட்ட, 15 புதிய பாலங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஈரோடு மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடங்கள், கூடலூர், சாத்தூர் நகராட்சிகளில் துப்புரவு பணியாளர் குடியிருப்புகள், ஆரணி புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட, 9.74 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டங்களையும், மக்கள் பயன்பாட்டுக்காக, முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், அரசுத்துறை செயலர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை