விருத்தாசலம் : விருத்தாசலத்தில் "கார்பைடு' கல் வைத்த வாழைப்பழ குடோன், வெடித்து தரைமட்டமானதை அடுத்து, விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல், 35; பழ வியாபாரி. விருத்தாசலம், தீர்த்தமண்டப தெருவில் வாழைப்பழ குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8 :00 மணிக்கு, குடோனை திறந்தபோது பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும், "கார்பைடு' கல் வைத்த வாழைப்பழ குடோன் வெடித்து தரைமட்டமானது. அருகிலிருந்த வீடும் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர் சண்முகம், வாழைப்பழ குடோனில் நேற்று ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தார். இது குறித்து, அவர் கூறுகையில், "குடோனில் பழங்களை பழுக்க வைக்க தடை செய்யப்பட்ட, கால்சியம் கார்பைடு கல் பயன்படுத்துகின்றனர். காற்று புகாதவாறு மூடப்பட்ட குடோனில், எளிதில் தீ பரவும் சாதனங்களை பயன்படுத்தினால், குடோன் வெடித்து சிதறும்' என்றார். புகாரின் பேரில், குடோன் உரிமையாளர் பழனிவேல் மீது, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.