சிவகங்கை: "ஆர்.டி.ஓ.,- தாசில்தார் அலுவலகங்களில் தொடர்ந்து, வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தப்பணி மேற்கொள்ளலாம்' என,தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2013 ஜன., 1 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு,18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், திருத்தப்பணிகள் நடந்தது. ஜன.,10ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் வரும்,விண்ணப்பங்களை பெறலாமா என்பது குறித்து தேர்தல் கமிஷன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 2013 அக்டோபரில் மீண்டும் வாக்காளர் சுருக்கத்திருத்த பணிகள் நடைபெற உள்ளது. அதன் பின், லோக்சபா தேர்தலுக்கான பணிகள் துவங்கி விடும். இந்நிலையில் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு,வாக்காளர் அடையாள அட்டை வழங்க,தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி விபரம்: லோக்சபா தேர்தலுக்காக, கிராமங்களில் 1,200, நகர்புறங்களில் 1,400 ஓட்டுக்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்க வேண்டும். ஜன.,10ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, கூடுதலாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் அடிப்படையில், ஓட்டுச்சாவடிகளையும் சரி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்களாக உள்ள அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால், அந்த இடத்திற்கு மாற்று ஊழியரை நியமிக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.