குப்பை வழக்கு போடும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ரொக்க பரிசு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை:குப்பை கொட்டுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு,1 லட்ச ரூபாய் பரிசும், அதிக குப்பை வழக்குகளை பிடிக்கும் போலீஸ்காரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் வழங்க, மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.பெருநகரங்களின் மிகப் பெரிய பிரச்னையாக, குப்பை உருவெடுத்துள்ளது. அள்ள அள்ள குறையாமல், அதிகரித்துக் கொண்டே இருக்கும் குப்பையால், மும்பை மாநகராட்சி மலைத்து போயுள்ளது."எவ்வித தொழில்நுட்பங்களை பின்பற்றினாலும், குப்பை மலை மட்டும், குறைவதே இல்லையே' என, வேதனைப்படும் மும்பை மாநகராட்சி, குப்பையைக் கையாளுவதற்கு, பல புதுமையான வழிமுறைகளை, பின்பற்றி வருகிறது.


அரசு சாரா சமூக சேவை நிறுவனங்களை அணுகி, குப்பை மேலாண்மையை திறம்பட மேற்கொள்வது குறித்து, கருத்து கேட்டுள்ளது. இதற்காக, ரொக்க வெகுமதியுடன், பரிசு போட்டியும் அறிவித்து, சிறந்த ஆலோசனை வழங்கும் அமைப்பிற்கு, பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளது.மேலும், இந்த பணியில், போலீசாரையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, குப்பை நிர்வாகம், சட்டவிரோத குடிசைகள் கட்டுப்பாடு, சாலையில் எச்சில் துப்புவோர் மீது நடவடிக்கை ஆகிய பணிகளை மேற்கொள்ள, போலீசாருக்கு உத்தரவும் வழங்கியுள்ளது.மும்பை மாநகராட்சி சட்டப்படி, குப்பை கொட்டுபவர்கள் அல்லது தெருக்களை அசுத்தப்படுத்துபவர்களுக்கு, அபராதம் விதிக்கும் அதிகாரம், போலீசுக்கு உள்ளது.


எனினும், போலீசார் பெரும்பாலும், அந்த சட்டத்தை பின்பற்றுவதில்லை. அபராதம் விதிக்கும் முறையை, போலீசார் பின்பற்ற துவங்கினால், குப்பை பிரச்னை குறைந்து, மாநகரம் சுத்தமாக மாறி விடும் என, மாநகராட்சி நிர்வாகம் நம்புகிறது.குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீஸ் ஸ்டேஷன்களில், அதிக வழக்கு பதிவு செய்யும் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என, அறிவிக்க உள்ளது.அது போல், அதிக வழக்குகள் பதிவு செய்யும் போலீஸ்காரர் அல்லது போலீஸ் அதிகாரிக்கும், 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கவும், மாநகராட்சி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.இன்னும் சில நாட்களில், இதற்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayabalan - chennai ,இந்தியா
02-பிப்-201307:25:10 IST Report Abuse
jayabalan கேசை குப்பையில் போட்டவங்க இப்போ குப்பை கேஸ் போடப் போறாங்களா?
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
01-பிப்-201318:26:10 IST Report Abuse
dori dori domakku dori இந்த சாலைல எச்சில் துப்புகின்றவனை பிடித்து உள்ள வைங்க , வாயில நல்லா லாடம் கட்டுங்க . பல வியாதிகளுக்கு இந்த சாலையில் எச்சை துப்பும் மிருகங்கள் தான் காரணம் .
Rate this:
Share this comment
Cancel
Anand Natarajan - Coimbatore,இந்தியா
01-பிப்-201314:25:05 IST Report Abuse
Anand Natarajan பணத்திற்காக பொய் கேஸ் போடாமல் இருந்தால் சரி மற்றபடி இந்த சட்டம் நல்லதே
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-பிப்-201305:54:52 IST Report Abuse
Lion Drsekar வாழ்க மும்பை மாநகராட்சி. இப்படி மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததற்காக அவர்களை மனதாரப் பாராட்டுவதோடு மட்டும் அல்லாமல் இதே போன்று இந்தியா முழுவதும் பின்பற்ற மற்ற மாநில முதல்வர்களுக்கும் ஒரு எத்துக்கட்டாக இருக்க வேண்டும் என்று பாராட்டுகிறோம்,. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்