தேனி: கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுபாட்டை போக்க, ஊராட்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பருவ மழைகள் பொய்த்து விட்டது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுக்கும், என அதிகாரிகள் கணித்துள்ளனர். சென்னை ஊரக வளர்ச்சி இயக்குனர், கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: கோடை காலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, அனைத்து கிராம ஊராட்சிகளும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதற்காக வருகிற ஜூன் மாதம் வரை, கிராம ஊராட்சிகளில், பொது நிதியில் இருந்து பணம் எடுத்தால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மட்டும் தான் செலவிட வேண்டும். அதை தவிர்த்து, ரோடு போடுதல், சுற்று சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. இதை கண்டிப்பாக அனைத்து கிராம ஊராட்சிகளும் கடை பிடிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.