விருதுநகர்: விலையில்லா ஆடு, மாடுகளை, கால்நடை டாக்டர்கள் கண்காணிக்க செல்லும் போது, மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டதாக பயனாளிகள் கூறுகின்றனர். இதையே சிலர், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விற்று விடுகின்றனர்.
ஏழை பயனாளிகளுக்கு, விலையில்லா ஆடு, மாடு வழங்கப்பட்டுள்ளது. இதை பயனாளிகள், நான்கு ஆண்டுகள் வரை, விற்காமல் வளர்க்கிறார்களா என்பதை, அப்பகுதி கால்நடை டாக்டர் கண்காணிக்க வேண்டும்.
மாதம் ஒருமுறை கண்காணிக்க செல்லும்போது, மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டதாக பயனாளிகள் கூறுவதால், மாடுகளை பார்க்காமலே, டாக்டர்கள் திரும்பி விடுகின்றனர். இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் பயனாளிகள், மாடுகளை விற்று விடுகின்றனர். இது, கால்நடை துறை அதிகாரிகளுக்கு, கால தாமதமாக தெரிய வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேப்பிலைப்பட்டியில், இலவச மாடுகளை விற்ற ஐந்து பேர் குறித்து, தாமதமாக கிடைத்த தகவலையடுத்து, போலீசில் புகார் செய்தனர். ஒவ்வொரு ஊராட்சியிலும், அதே கிராமத்தைச் சேர்ந்தவரே தலையாரி அல்லது ஊராட்சி எழுத்தராக இருப்பர். இவர்களுக்கு கிராமத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளும் எளிதாக தெரிந்து விடும்.
இவர்களை கொண்டு, ஆடு, மாடுகளை கண்காணித்து, இது தொடர்பான தகவல்களை, கால்நடை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வேலையை, கூடுதலாக ஒப்படைத்தால், விலையில்லா மாடுகள் விலை போவது தடைபடும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.