"விஸ்வரூபம்' படப் பிரச்னையில், " நடந்தது என்ன' என்பது, குறித்து, கமல் ரசிகர்கள் தொகுத்து வெளியிட, விரும்பிய துண்டு பிரசுரங்களுக்கு, கமல் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமைதி காப்பது முக்கியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் கமல் அளித்த பேட்டி அவரது ரசிகர்களை ஆவேசத்திற்குள்ளாகியுள்ளது. கமலுக்கு ஆதரவாக, நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவரது வீட்டில் குவிந்தனர். அப்போது, பட வெளியீட்டிற்கு ஏற்பட்ட தடைகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும், விளக்கமான துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இவர்களில் சிலர், நேற்று காலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்திற்கு வந்து, கமலை சந்தித்து அனுமதி கேட்டனர். அப்போது, கமல் மும்பை புறப்பட்டு சென்று விட்டதால், அவரது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் ஒத்துழைப்புடன், படத்தை திரையிடும் முயற்சி துவங்கி விட்டது. இந்நிலையில், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டால், பிரச்னை வேறு வகையில் திரும்பும். எனவே ரசிகர்கள் எவ்வித செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என கமல் உத்தரவிட்டுள்ளதாக, அவரது அலுவலகத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கலைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.