சென்னை: பள்ளி கல்வித்துறையில், 554 இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடக்கின்றன. கடந்த, 2007-08 முதல், 12-13ம் ஆண்டு வரை, குரூப்-4 நிலையில், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட, 554 இளநிலை உதவியாளர்களை, சமீபத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்து, தேர்வர்களின் பட்டியலை கல்வித்துறையிடம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது. தேர்வு பெற்றவர்கள் அனைவரும், தங்களது இருப்பிட முகவரி அமைந்துள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, நாளை காலை, 9:00 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு காலையிலும், மாவட்டம் விட்டு, வேறு மாவட்டத்தில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, பிற்பகலிலும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பணி ஒதுக்கீட்டு ஆணைகளை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், பணி நியமன ஆணைகளை, மாவட்ட கல்வி அலுவலர்களும் வழங்குவர். ஞாயிற்றுக்கிழமை, மருத்துவ சான்றிதழை பெற்று, திங்கள்கிழமை, அனைவரும் பணியில் சேரலாம் என, கல்வித்துறை தெரிவித்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.