நாகப்பட்டினம்: நாகையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயத்தை அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, விவசாயிகள் ஆவேசமாக பேசினர். நாகை, கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் முனுசாமி தலைமையில் நடந்தது. அனைத்து துறை அலுவலர்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: டீசல் விலையை மத்திய அரசு வரைமுறை இல்லாமல் உயர்த்தி வருகிறது. பெட்ரோலிய துறையை மேம்படுத்துவதற்காக, டீசல் விலையை உயர்த்துவது விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கை. ஒரு ஏக்கரில் விவசாயம் செய்வதற்கு 35 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஏற்கனவே சாவா, வாழ்வா என்று விவசாயிகள் வாழ்க்கை இருக்கும் போது மத்திய அரசின் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. மத்திய அரசு நடவடிக்கையால் உர விலை ஏகத்திற்கும் உயர்ந்துள்ளது. உரம் வழங்குவதில் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதையும், காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறுக்கும் மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறோம்.
விவசாயிகள் குறைவாக நெல் உற்பத்தி செய்துள்ள நிலையில் குவிண்டாலுக்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும். தற்போது மத்திய அரசு 1300 ரூபாய் குவிண்டாலுக்கு விலை நிர்ணயித்துள்ளது. மாநில அரசு 50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்குவதை, 300 ரூபாயாக அதிகரித்து தரவேண்டும். டெல்டாவின் வடிகாலாக இருக்கும் நாகை மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகளின் முகத்துவாரங்களை தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து வந்தாலும், பொதுப்பணித் துறையின் செயலற்ற தன்மையால் விவசாயிகள் வாழ்வாதரம் கேள்விக் குறியாக மாறி விட்டது. இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.