Advertisement
பிரம்மபுத்ரா நதியில் அணை:சீனாவுக்கு இந்தியா பதில்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,00:37 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 01,2013,01:49 IST

புதுடில்லி:"பிரம்மபுத்ரா நதி குறித்து சீனா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும், உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என, மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.சீனாவின், திபெத் பகுதியில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அணைகள் கட்டப்படுவதால், இந்தியாவில் பிரம்மபுத்ரா நதியை நம்பியுள்ள, மாநிலங்களின் நலன் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நேற்று கூறியதாவது:பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும், மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது தொடர்பாக, இந்தியா வின் சார்பில் கருத்துகளையும், ஆலோசனைகளையும், சீனாவுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். குறிப்பாக, அணையின் நீர்மட்டம் எவ் வளவு இருக்க வேண்டும் எனவும், குறிப்பிட்டுள்ளோம். இந்த நடவடிக்கையின் மூலம், பிரம்மபுத்ரா நதியால் பயன் அடைந்து வரும், மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
anwarhalwani - thiruvaarur,இந்தியா
01-பிப்-201320:17:09 IST Report Abuse
anwarhalwani சொந்த நாட்டிலே காவிரியில் தண்ணி விடாம,, டெல்டாவை பொட்டல் காட ஆக்கி மத்திய மாநில அரசு ரசிக்கிறீங்க,,, வேற ஆண்டவன் இப்பிடித்தான் தண்டன கொடுப்பான்,, சீனாட்ட போய் மோதுங்க.. நல்லா குடுப்பான்,,இப்ப பாகிஸ்த்தானோட ஹார்பார வேற உபயோகிக்க ஆரம்பிச்சிட்டான்,, முட்டாள் மக்களாட்சி,, மக்களும் முட்டாளாச்சி, விஸ்வரூபம் தானே நமக்கு பெரிசு,, நாடு எக்கேடு கெட்டா என்ன,,??? தடை செஞ்ச சினிமாவ பாக்க சக சகோதரன கொல்லக்கூட துனிஞ்சிட்டான் ,, எங்கே உறுப்புட போவுது நாடு,,
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்
01-பிப்-201318:17:12 IST Report Abuse
MentalTamilan நீங்க உன்னிப்பா கவனிசிடாலும், விளங்கிடும்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
rajkumar vmmc - Dammam,சவுதி அரேபியா
01-பிப்-201314:17:01 IST Report Abuse
rajkumar vmmc அட பாவிங்களா ஆக மொத்தத்துல கட்டுறதை தடுக்குரத்துக்கு வழிய காணோம்.. அதுக்குள்ளே அதுல எவ்வளவு தண்ணி இருக்கணும் அப்படின்னு சொல்வது யப்பா ராஜ தந்திரங்களை கரைத்து குடிச்சிடீங்க போங்க
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
rajan - kerala,இந்தியா
01-பிப்-201310:34:20 IST Report Abuse
rajan இப்படி ஒருத்தரை ஒருத்தர் தெளிவு படுத்துவதிலேயே இருங்க. சைனா இந்த அனைய கட்டி நம்ம மாநிலத்துல தண்ணீர் பத்த குறைய உண்டாக்கி கடைசில நம்ம மக்களே சைனவோட இந்த மாநிலங்களை இணைத்திட வழிவகுக்கும்.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Ruchika Engg Works - new delhi,இந்தியா
01-பிப்-201316:11:00 IST Report Abuse
Ruchika Engg Worksதேசிய நதி நீர் திட்டமெல்லாம் எங்கே போனது?...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.