சிவகங்கை: போலீஸ் பாதுகாப்பில் இருந்த போது, இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கையை, பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தை சேர்ந்தவர் முத்து மாணிக்கம். இவரது மனைவி பானுமதி,35. இவர் ஜன.,29ல் தனது குழந்தைக்கு சிகிச்சை பெற மானாமதுரைக்கு வந்தார். சிகிச்சை முடிந்து, ஊருக்கு செல்வதற்காக புதிய பஸ் ஸ்டாண்ட்டிற்கு நடந்து சென்றார். கீழப்பசலை கால்வாய் ரயில்வே கேட் அருகே திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த மகேந்திரன், 31 அவரை மறித்து, 3 பவுன் செயினை பறித்து தப்பினர். அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியினர் விரட்டி பிடித்து, மகேந்திரனை தாக்கினர்.பின்னர் மானாமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில், திடீரென அவர் மயங்கினார். மானாமதுரை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் இறந்தார்.
மானாமதுரை அரசு மருத்துவமனையில், அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. போலீசார் தாக்கியதில் தான் மகேந்திரன் இறந்தார் எனக் கூறி, அவரது பெற்றோர், உறவினர்கள், உடலை வாங்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.ரூ.10 லட்சம் நிவாரணம்,மகேந்திரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். டி.ஆர்.ஓ., தனபால், ஆர்.டி.ஓ.,மலையாளம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதால் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
படித்தவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வருமான வரி கட்டுபவர்கள்தான் இது போன்று இறந்தால் இன்சூரன்ஸ் கம்பனிகளிடம் இறந்தவருக்கு இன்ன வேலை, தற்போது இந்த வயது, இவருக்கு இன்னமும் இதனை வயது இருந்து இருந்தால் இவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்றெல்லாம் கணக்கிட்டு கிளைம் கேட்ப்பார்கள், தற்போது திருடர்களும் கேட்க்க ஆரம்பித்து விட்டனர் என்றால் ஜனநாயகம் எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது ? வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.