திருப்பூர் : பைன் பியூச்சர் நிறுவனத்தில் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத் தரக் கோரி உடுமலை பகுதி முதலீட்டாளர்கள், மத்திய குற்றப் பிரிவில் நேற்று புகார் செய்தனர். உடுமலை மற்றும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த முதலீட்டாளர்கள், போலீசாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரிய வாளவாடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ், வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபாணி உடன் எங்களிடம் வந்து, "பைன் பியூச்சர் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மாதம் 850 ரூபாயும், கூடுதலாக சேர்க்கும் நபருக்கு கமிஷன் தொகையாக மாதம் 200 ரூபாயும் வழங்கப்படும்,' எனக் கூறினர். "முதலீடு செய்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்: ஆசிரியர் பணியில் இருந்தாலும், அந்த வருமானத்தை விட கூடுதலாக இதில் பணம் கிடைக்கும். ஒரு கோடி ரூபாய் வீடு, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள், சொகுசு கார் என்னிடம் உள்ளது. அரசுப் பணியில் உள்ளோர் பலர் இதில் இணைந்துள்ளதால், யாரும் ஏமாற்ற முடியாது,' என்றும் தெரிவித்தார். மேலும், "முதலீடு செய்த அசலுக்கு உத்தரவாதமும் அளித்தார். வருமானத்திலிருந்து டிரஸ்ட் ஏற்படுத்தி, அதில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் கூட, முதலீடு பணம் திரும்ப கிடைக்கும் எனவும் கூறி, எங்களை ஏமாற்றி விட்டார்.
கடந்த ஆண்டு அக்., மாதம் முதல் செய்த முதலீட்டுக்கு உரிய பணம் திரும்ப வரவில்லை. தவணை முடிந்து கேட்டால், ஆட்களை வைத்து மிரட்டுகிறார். மீறினால், எந்த ஆதாரமும் இல்லை. எப்படி பணத்தை திரும்ப வாங்க முடியும் என்கிறார். எங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் கூறுகையில், "பைன் பியூச்சர் நிறுவனர்கள் மற்றும் ஏஜன்ட்கள் மீது ஏற்கனவே புகார்கள் உள்ளன. எங்களிடம் மட்டும் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தங்கராஜை, இன்று (நேற்று) போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். தகவல் அறிந்து நாங்களும் புகார் செய்தோம்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.