E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மதுரை அழகர் கோவில் யானை மிதித்து பெண் வன ஊழியர் பலி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:38

சேலம் : சேலம் வன உயிரின பூங்காவில், யானை மிதித்து, பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மதுரை, அழகர் கோவிலில் இருந்த, "ஆண்டாள்' என்ற பெண் யானை, நான்கு ஆண்டுகளுக்கு முன், சேலம் அருகேயுள்ள குரும்பப்பட்டி வன உயிரின பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, 10 மணிக்கு, நடை பயிற்சி அளிப்பதற்காக, வன உயிரின பூங்கா கேட்டை, பாகன் காளியப்பன் திறக்கச் சென்றார். அப்போது, வன ஊழியர் பத்மினி, 55, வன விலங்கு காப்பாளர் சரஸ்வதி ஆகியோர், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த யானை, திடீரென 2 பெண் வன ஊழியர்களையும் தாக்க முயன்றது. இதில், சரஸ்வதி மயிரிழையில் தப்பினார். ஆனால், பத்மினியை தும்பிக்கையால் இழுத்த யானை, கீழே போட்டு, பின் காலால் மிதித்தது. சம்பவ இடத்திலேயே பத்மினி இறந்தார். தொடர்ந்து, ஆக்ரோஷமாக இருந்த ஆண்டாள் யானையை, பாகன்கள் இழுத்துச் சென்று, பெரிய சங்கலியால் மரத்தில் கட்டினர். கட்டி வைத்த பிறகும், அந்த யானை தும்பிக்கையால் மரத்தை வளைத்துப் பிடித்தும், தலையால் மரத்தை மோதியும் பிளிறிக் கொண்டிருந்தது.

வன அலுவலர், தங்கராஜ் கூறியதாவது: இறந்த வன ஊழியர் பத்மினி, 2009 முதல், நிரந்தர பணியாளராக பணிபுரிந்து வந்தார். யானை தாக்கி இறந்த சம்பவம், இங்கு முதல் முறையாக நடந்துள்ளது. யானை ஆக்ரோஷமாக இருப்பதால், அருகில் யாரும் செல்ல முடியவில்லை. கோவையில் இருந்து, வனத்துறை டாக்டர் மனோகரன் வந்த பின், யானையை பரிசோதனை செய்வார். யானை தாக்கி, வன ஊழியர் இறந்த சம்பவத்தால், உயிரின பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

"பெண்களை கண்டால் ஆண்டாளுக்கு பிடிக்காது' : யானைப் பாகன் காளியப்பன் கூறியதாவது: மதுரை, அழகர் கோவிலில் இருந்த ஆண்டாள் யானை, சில ஆண்டுகளுக்கு முன், கோவிலுக்கு வந்தவர்களை தாக்கியது. அதில், இரண்டு பெண்கள் இறந்தனர். இதையடுத்து, குரும்பப்பட்டி வன உயிரின பூங்காவில், யானை ஒப்படைக்கப்பட்டது. தினமும், 2 கி.மீ., தூரம், யானையை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வோம். 62 வயதாகியுள்ள ஆண்டாள் யானையின் எடை, 4,000 கிலோ. இந்த யானைக்கு, பெண்கள் என்றாலே பிடிக்காது என, கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.