விருதுநகர் : விருதுநகர் அருகே, பேன்சி ரக வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில், "தூக்குமணி' மருந்து வாளி, தவறி கீழே விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
விருதுநகர் முத்துலிங்காபுரம், கட்டனார் பட்டியில், சிவகாசி விஜய சுந்தர், 37, என்பவருக்கு சொந்தமான, "ரவீந்திரா பயர் ஒர்க்ஸ்' உள்ளது. பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் இந்த ஆலையில், 55 அறைகள் உள்ளன. இதில், 80 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு, பேச்சியம்மாள், 55, என்பவர், "தூக்குமணி' மருந்தை, வாளியில் ஒரு அறையிலிருந்து, மற்றொரு அறைக்கு கொண்டு சென்றார். அப்போது, அறை கதவில் வாளி மோதியதில், மருந்து கீழே கொட்டி, தீ விபத்து ஏற்பட்டது. பேச்சியம்மாள் மற்றும் பஞ்சவர்ணம், 54, ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, ஆலை போர்மேன், திரவியராஜ், 30, கைது செய்யப்பட்டார். வச்சகாரபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.