E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:40

விழுப்புரம் : மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம், 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர், ஆதம்பாஷா, 37. இவர், அன்னை இந்திரா தொண்டு நிறுவன இயக்குனராக உள்ளார். அரசமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் ஐந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, அப்பகுதியில் உள்ள வங்கி மூலம், கடன் பெற்று தருவதாக கூறினார். வங்கியிலிருந்து, 2009 ஜன., 1ம் தேதி, கடன் பெற்று தந்தார். இந்த கடனுக்கான தொகையை, மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள், அங்குள்ள தலைவிகள் மூலம் வங்கியில் செலுத்த சென்ற போது, ஆதம்பாஷா அதை வாங்கி, தானே செலுத்துவதாக கூறினார். அவரிடமே மாதந்தோறும் சுயஉதவி குழுவினர், கடன் தொகையை அளித்தனர். கடந்த, 16ம் தேதி, அரசமங்கலத்தில் உள்ள ஐந்து மகளிர் சுயஉதவிக்குழு அலுவலகத்திற்கு, வங்கி மூலம் கடன் பெற்ற, 12 லட்சம் ரூபாய் செலுத்தப்படவில்லை என, நோட்டீஸ் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், ஆதம்பாஷாவிடம் கேட்ட போது, அவர் பணத்தை வங்கியில் செலுத்தாதது தெரிய வந்தது.
அரசமங்கலம், மல்லிகை பூ மகளிர் சுய உதவிக் குழு தலைவி, நீலாவதி அளித்த புகாரை அடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு, ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.