சேலம் : சேலத்தில் கொலை செய்யும் திட்டத்துடன், தாக்குதல் நடத்திய, ஆறு பேர் கொண்ட ரவுடி கும்பலை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம், சின்னக்கொல்லப்பட்டியை சேர்ந்த, சத்தியமூர்த்தி மகன், கோழி பிரகாஷ், 26. இவரை, ஆறு மாதத்துக்கு முன், பெரியபுதூரை சேர்ந்த, ஆறு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், அந்த கும்பலை சேர்ந்த சிலர், கோழி பிரகாஷை மீண்டும் தேடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கோழி பிரகாஷ், நேற்று அதிகாலையில், ஐந்து பேரை ஆட்டோவில் அழைத்து, பெரியபுதூர் சென்றார்.
அங்கு, கொம்பைக்காடு மாரியம்மன் கோவில், திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் போல் வந்த இவர்கள், பழனிவேல், 48, என்பவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். அவர் சத்தம் போடவே, அப்பகுதி மக்கள் திரண்டு, ரவுடி கும்பலை தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த, போலிஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர், ஆறு பேர் கொண்ட ரவுடி கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பழிக்குப் பழி வாங்கும் வகையில், கொலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
வழக்கு பதிவு செய்த போலீசார், ஆறு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.