Advertisement
அத்துமீறிய இளைஞனை தாக்கிய இளம்பெண்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,00:40 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 01,2013,01:56 IST

கோல்கட்டா:நடுரோட்டில், கையை பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞனை அடித்து விரட்டியதோடு, போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்த, 19 வயது இளம் பெண்ணை போலீசார் பாராட்டினர்.


மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா நகரின் முக்கிய வீதியான, ராபி அகமது கித்வாய் ரோட்டில், 19 வயது இளம் பெண், நேற்று முன்தினம், அலுவலகம் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த இளைஞன் ஒருவன், இளம்பெண் மீது வேண்டுமென்றே மோதினான். கண்ணால் அவனை எச்சரித்து, சில அடி தூரம் நடந்தார்.பின் தொடர்ந்து வந்து, தவறாக பேசிய அந்த இளைஞன், தொட்டு விளையாட துவங்கினான். இதனால் கோபம் கொண்ட அந்த பெண், அவனை அடித்தாள்.பதிலுக்கு அவனும் அடிக்க துவங்கவே, அந்த பெண் சத்தம் போட்டு, கூட்டத்தை கூட்டினார். பொதுமக்கள், அந்த இளைஞனை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.


"விட்டால் போதும்' என, அவன் தப்பி ஓடினான்.எனினும், அவனை விடாது விரட்டிய இளம் பெண், பிடிக்க முடியாமல் திரும்பினார். அப்படியே விட்டால் சரி வராது என கருதி, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.வழக்கமாக இது போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து பழக்கம் இல்லாத போலீசார், பெண்ணின் புகாரை பதிவு செய்ததோடு, அந்த பெண்ணை பாராட்டவும் செய்தனர்."ஈவ்-டீசிங் குற்றங்களின் போது, வெட்கப்பட்டு, வெளியே சொல்ல பெண்கள் தயங்குவதால் தான், அக்கிரமக்காரர்கள் அட்டூழியம் அதிகரித்து விட்டது. எல்லா பெண்களும் உங்களை போல தைரியமாக புகார் கொடுக்க முன்வந்தால், கொஞ்ச காலத்தில், ஈவ்-டீசிங்கே இருக்காது' என, போலீஸ் அதிகாரி ஒருவர் பாராட்டினார்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
Prabu.KTK - Coimbatore,இந்தியா
01-பிப்-201315:10:26 IST Report Abuse
Prabu.KTK சபாஷ் வாழ்த்துக்கள் பெண்ணே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
01-பிப்-201311:43:08 IST Report Abuse
Guru பாராட்டுக்கள் சகோதரி.. எப்படித்தான் தெய்ரியமாக செயல்படவேண்டும்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Skv - Bangalore,இந்தியா
01-பிப்-201307:56:17 IST Report Abuse
Skv பெண்களே கைலேஎப்பூதுக் மிலகாய்த்தூல் வச்சுக்குங்க இதுபோன்ற சமயத்துலே மூஞ்சிலெ விசுங்க கண் களைப்பார்த்து
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
01-பிப்-201306:24:08 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க நவீன ஜான்சி ராணி................................. அல்லது கலியுகத்து அபூர்வ சிந்தாமணி. வாழ்த்துக்கள்.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.