கன்னிவாடி : மாணவர்களை,பள்ளி தலைமையாசிரியர் குச்சியால் அடித்ததை கண்டித்து, கசவனம்பட்டி நடுநிலைப்பள்ளியை, கிராம மக்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் உள்ள, அரசு உதவிபெறும் திருமுருகன் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துராமலிங்கம், 57. குரும்பபட்டியைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர், பள்ளியில் இருந்த "ரிங்பாலை' சேதப்படுத்தியுள்ளனர்.
இதற்காக, மாணவர்களை தலைமையாசிரியர் அடித்துள்ளார்.நேற்று மாலை வீட்டிற்குச் சென்ற மாணவர்கள், காது, தலை, கால் வலிப்பதாக கூறியுள்ளனர். பெற்றோர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தலைமையாசிரியர் குச்சியால் அடித்து மிரட்டியதாக, பெற்றோரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து, நேற்று குரும்பபட்டியைச் சேர்ந்த, 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை, பள்ளி வேனில் அனுப்ப மறுத்து, பள்ளிக்குச் சென்று, தலைமையாசிரியரை கண்டித்து கிராமமக்கள் முற்றுகையிட்டனர். இன்று பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.