புதுடில்லி:கரும்புக்கான ஆதரவு விலையை, 23 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையடுத்து, குவிண்டால் ஒன்றுக்கு, 210 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி நேற்று கூடியது. இதில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது. தற்போது, கரும்பு விவசாயிகளுக்கு, ஆதரவு விலையாக மத்திய அரசு, குவிண்டால் ஒன்றுக்கு, 170 ரூபாய் வழங்கி வருகிறது.
இதை, அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய, உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் பேசுகையில், "கரும்புக்கான ஆதரவு விலை, 210 ஆக வழங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை காட்டிலும், 40 ரூபாய் அதிகமாகும்' என்றார்.கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் ஆதரவு விலையை விட, தமிழகம் மற்றும், உ.பி., மாநிலங்கள், மாநில ஆதரவு விலை என்ற பெயரில் கரும்பு விவசாயிகளுக்கு அதிக தொகையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.