முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பலில், டெங்கு காய்ச்சலுக்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூதாட்டி பத்மினி பலியானார். இளஞ்செம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரம்பலில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வாறுகால் வசதியின்றி தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் கழிப்பறை பிரச்னைகளால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சில நாட்களாக தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு, இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் மகராசி எஸ்தர் ராணி உட்பட 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர். 60 பேர், கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பத்மினி, 60, நேற்று பலியானார்.
இது குறித்து வீரம்பல் அற்புதராஜ் கூறுகையில், ""இந்த ஊராட்சிக்கு இருமுறை மட்டுமே, அரசு பஸ் இயக்கப்படுகிறது. சிகிச்சைக்காக 10 கி.மீ., தூரத்தில் உள்ள மேலச்சிறுபோது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வர சிரமமாக உள்ளது. இதுவரை இங்கு மருத்துவ குழு வரவேயில்லை. பலர் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்றார்.
இளஞ்செம்பூர் ஊராட்சி தலைவர் மயிலேறிவேலன் கூறுகையில், ""தெருக்களில் தினமும் "பிளீச்சிங் பவுடர்', கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. மருத்துவக்குழு சிகிச்சையளிக்க, மேலச்சிறுபோது ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரிடம் தெரிவித்துள்ளேன்,'' என்றார். இது குறித்து மேலச்சிறு போது ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒருவர் கூறுகையில், ""டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து, இதுவரை தகவல் இல்லை. நாளை முதல் முகாமிட்டு சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.