பரங்கிப்பேட்டை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., மீதான தேர்தல் விதிமுறை வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி முடிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., 2001ல், சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் விதிகளை மீறி, புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய, நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இது தொடர்பாக, புவனகிரி தேர்தல் அதிகாரி செல்வமணி, ஜெ., மீது பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். "இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில், ஜெ., தடை உத்தரவு பெற்றார். இதனால் இவ்வழக்கு, 48 முறை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெ., தரப்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி, வழக்கை ரத்து செய்து, கடந்த நவ., 21ம் தேதி, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு நகலை, சமர்ப்பித்தனர். இதையடுத்து, மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ராபர்ட் கென்னடி ரமேஷ், ஜெ., மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை முடித்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.