தூத்துக்குடி: கல்லூரி மாணவியை, கற்பழித்து கொலை செய்த, கூலித்தொழிலாளிக்கு, ஆயுள்தண்டனை விதித்து, தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி, டி.குமாரகிரி, ராமசுப்பு மகள் ரூபிகா,19; தனியார் கல்லூரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்தார். 2010, டிச.,18, மாலை, வீட்டின் அருகே, ரூபிகாவை வழிமறித்த, அதே ஊர் கூலித்தொழிலாளி மாடசாமி,29, அவரை கற்பழித்து கொலை செய்து, உடலை, கண்மாயில் போட்டார். சிப்காட் போலீசார், மாடசாமியை கைது செய்தனர். பல்வேறு தரப்பினரின் போராட்டத்தால், இக்கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்-1ல், விசாரணை நடந்தது.
ஆயுள் தண்டனை: இவ்வழக்கில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, கொலையாளி மாடசாமிக்கு, ரூபிகாவை வழிமறித்ததற்காக , மூன்று மாதம் சிறை தண்டனை, அவரை கற்பழித்ததற்காக, ஏழு ஆண்டு சிறை தண்டனை, கொலை செய்தததற்காக, ஆயுள் தண்டனை விதித்தார். இத்தண்டனைகளை, அவர், ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டுமென நீதிபதி குறிப்பிட்டார். 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.